வேதாரண்யம் அருகே ஒரு அடி உயர நடராஜர் சிலை கண்டெடுப்பு

வேதாரண்யம், மார்ச் 21: வேதாரண்யம் அருகே அரசு கட்டிடம் கட்ட குழி தோண்டிய போது 1 அடி உயர நடராஜர் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தில் கூட்டுற கடன் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட குழிதோண்டியபோது சாமி சிலை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தேவதாசன் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், வேதாரண்யம் போலீஸ் டி.எஸ்.பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சிலையை பார்வையிட்னர். கண்டெடுக்கபட்ட சிலை ஒரு அடி உயரம், 4 கிலோ 800 கிராம் எடைகொண்ட நடராஜர் சிலை என்பது தெரியவந்தது.

Related Stories: