வடமதுரை, மார்ச் 21: வடமதுரை அருகே காரில் ஆட்டை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமதுரை, எரியோடு சுற்று வட்டார பகுதி கிராமங்களில் ஏராளமானோர் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். ஆடுகளை சாலையோரம் உள்ள வயல்களில் மேய்ச்சலுக்கு விடும்போதும், வீடுகளில் கட்டி வைத்திருக்கும் போதும் மர்ம நபர்கள் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக கார் மற்றும் டூவீலர்களில் வலம் வரும் திருட்டு கும்பல் சில நிமிடங்களில் ஆடுகளை திருடி சென்றுவிடுகின்றனர். நேற்று முன்தினம் அய்யலூர் – எரியோடு சாலையில் வேப்பமர பிரிவு பகுதியில் இருந்த மேற்கு களத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரது ஆட்டுக்கிடாய் ஒன்றை காரில் வந்த நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
