திருவாரூர், மார்ச் 21: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 எம்.எல்.ஏ தொகுதிகளுக்கும் கணினி வாயிலாக ரேண்டம் முறையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நாளை மறுதினம் நடைபெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக, திருவாரூர் மாவட்டத்தில் முதல் நிலை சரிபார்ப்பு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடு-களை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் நன்னிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட கலந்து குழுக்குதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மென்பொருள் மூலம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரால் நாளை மறுதினம் (23ந் தேதி) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
