கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் விவசாய பயன்பாட்டிற்கு ட்ரோன்கள் அறிமுகம்

 

கொடைக்கானல், மார்ச் 21: கொடைக்கானல் மன்னவனூர் மலைப்பகுதியில் விவசாயிகளுக்கான ட்ரோன் பயிற்சி முகாம் நடந்தது. கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான மன்னவனூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் தொழில்நுட்ப விளக்கக் காட்சி மற்றும் பயிற்சி நடைபெற்றது. இதில், ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் சீரான முறையில் மருந்து தெளிக்க முடியும் என்றும், இதனால் தொழிலாளர் பற்றாக்குறை குறைந்து செலவும் குறையும் என்றும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த செயல் விளக்க பயிற்சி முகாமில் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ட்ரோன் பயிற்சி நிறுவனமான சத்குணா ஆக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா, தலைமை செயல் அலுவலர் முர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யர், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நவீன தொழில்நுட்ப முறையான ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

 

Related Stories: