தமுக்கம் மைதானத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: ஏராளமானோர் பங்கேற்பு

 

மதுரை, மார்ச் 21: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜாக் அமைப்பின் சார்பில் மதுரையில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு துஆ செய்தனர்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். இந்த மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைபிடிப்பர். இஸ்லாமியர்கள் மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்கி வருவர். ரமலான் 30 நோன்பு முடிவடைந்த பின், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடுவர். இதன்படி நேற்று வளைகுடா நாடுகள் மற்றும் கேரளம் மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அதனை பின்பற்றி மதுரை மாவட்டம் ஜாக் அமைப்பின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Related Stories: