கறம்பக்குடி, மார்ச் 21: நாஞ்சிக்கோட்டை பகுதியில் செண்டி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. செண்டி பூக்கள் மூலம் குறைந்த காலத்தில் நிறைவான லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர். தமிழகத்தில் பூக்கள் அதிகம் சாகுபடி செய்யும் மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முதலிடத்தை பெற்று உள்ளது. மதுரை மாவட்டத்தில் மல்லிகை, ரோஜா, சாமங்கி ஆகிய பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வருகின்றனர்.
இதைப்போல சேலம், ஓசூர், திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலும் விவசாயிகள் அதிக அளவில் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, மழையூர், வெட்டான்விடுதி, கருக்காகுறுச்சி, வாண்டான் விடுதி, பட்டத்திக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது விவசாயிகள் செண்டி பூக்களை சாகுபடி செய்து வருமானத்தை ஈட்டுகின்றனர்.
