தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி-விஜில் செயலியில் புகார் அளிக்கலாம்

 

மூணாறு, மார்ச் 21: வரும் சட்டமன்றத் தேர்தலில் விதிமீறல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் சி-விஜில் செயலி மூலம் தெரிவிக்கலாம் என்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் செருவாட் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேர்தலின் போது நடைபெறும் விதிமீறல்களைப் பொதுமக்கள் சி-விஜில் செயலிமூலம் நேரடியாகப் புகாரளிக்க முடியும். புகார்தாரர்கள், அரசு நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் பேனர்களின் புகைப்படங்களை எடுத்து, அதனுடன் சிறு குறிப்பையும் சேர்த்து செயலியில் பதிவேற்றம் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து புகார்களைத் தெரிவிக்கலாம். புகார் அளிக்கப்பட்ட 60 நிமிடங்களுக்குள் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: