மன்னார்குடி, மார்ச் 21: தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என மன்னார்குடி மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் WWW.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மன்னார்குடி மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் வருகிற 26.3.2026 முதல் 3.4.2026 ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.
இதில் மன்னார்குடி மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழியாக ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். வெப் கேமரா மூலமாக புகைப்படம் எடுத்து தேர்வு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலை முதல் மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
