தஞ்சாவூர், மார்ச் 21: தினகரன் செய்தி எதிரொலியால் தஞ்சை பெரியகோவில் விமான கோபுரத்தின் உச்சியில் உள்ள விளக்கு சரி செய்யப்பட்டு தற்போது ஒளிர்ந்து வருகிறது.
தஞ்சை பெரியகோவில் விமான கோபுரத்தின் உச்சியில் உள்ள விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து இருந்தது. எனவே அந்த விளக்கை மீண்டும் ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
