பட்டிவீரன்பட்டி, மார்ச் 21: பட்டிவீரன்பட்டியில், நகர திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகரச் செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார்.
பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கல்பனா தேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளையும் திமுக வெற்றி பெற வைப்பது, அதிமுக வசம் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்து நிலக்கோட்டை தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றுவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
