சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் ‘அழகர்கோயில்’

 

மதுரை, மார்ச் 21: அழகர்கோயிலில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் வருகிற ஏப்.19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து அழகர்கோயிலில் ஏப்.27ம் தேதி கள்ளழகருக்கு காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கி உள்ளது.

Related Stories: