மதுரை, மார்ச் 21: சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக பல விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூறு சதவீத வாக்களிப்பை உறுதி செய்திடும் வகையில் முழுவதும் பெண்கள் பங்கேற்ற டூவீலர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நூறு சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி, என் வாக்கு என் உரிமை விழிப்புணர்வு பதாகைகளுடன் பிங்க் நிற ஆடைகளுடன் ஏராளமான ெபண்கள் பங்கேற்றனர். இந்த பேரணியை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். இந்த பேரணி காந்தி மியூசியம், ராஜாமுத்தையா மன்றம், ரேஸ்கோர்ஸ், மாநகராட்சி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து பெண்களின் வாக்கு நூறு சதவீதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையில் பெண்களின் இடது கையில் மெகந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் ெகாண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் டிஆர்ஓ அன்பழகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வானதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
