வேதாரண்யம் பகுதியில் 2 நாட்களாக விட்டுவிட்டு மழை

 

வேதாரண்யம், மார்ச் 21: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாமழை விட்டுவிட்டுமழை பெய்கிறது. இதனால் உப்பு உற்பத்தி லேசாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வயல்களில் அறுவடை செய்த சம்பா சாகுபடி வைக்கோல் கட்ட முடியாமல் தேங்கிய மழை நீரால் சேதமடைந்துள்ளன.
வேதாரண்யம் பகுதியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழை காரணமாக 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கடுமையான வெயில் அடித்த நிலையில் உப்புவார் முதல் தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் உப்பள பகுதிகளில் தண்ணீர் நேராக சேர்ந்து உப்பு வார் முதல் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் உப்பு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படும்.

Related Stories: