நாகப்பட்டினம், மார்ச் 21: தேர்தலை முன்னிட்டு சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிவாரியாக தற்செயலாக தேர்ந்தெடுக்கும் முறை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ம் தேதி நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
