சென்னை: திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும். வீடுதோறும் சென்றடைந்துள்ள திராவிட மாடல் இன் சாதனைகள். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள். அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல். இதுதான் திமுக. ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும்-நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
