நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்: சொன்னாரு..! செஞ்சாரு..!!

சொன்னாரு: தமிழக சுகாதாரத் துறையின் 2023-24ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், ‘பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள நகராட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதையை கண்டறிந்து, ஆரோக்கியமான நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதைகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் மக்களுடன் இணைந்து மாவட்ட அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடைபயிற்சியின் முடிவில் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

செஞ்சாரு: உலக சுகாதார அமைப்பு தரவுகளின்படி உடற்பயிற்சி செய்வது மூலம் நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28% குறைக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதய நோய் பாதிப்பும் குறைக்கிறது. மக்கள் தினந்தோரும் நடைப்பயிற்சி செய்வது மூலம் 30 மிக சிறந்த வகையில் உடலை பேணிக்காக்கும் அடையாளம் என்று கருதப்படுகிறது. இதனை முன்னிறுத்தி ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை, அடையாறு டாக்டர் முத்துலட்சுமி பூங்கா அருகில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 4, 2023ம் ஆண்டு கொட்டும் மழையில் நனைந்தபடி தொடங்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார். தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்துமாவட்டங்களிலும் காணொலிக் காட்சி மூலமாக திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதையை கண்டறிந்து, ஆரோக்கியமான நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதைகள் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக அனைத்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்களும் நகராட்சி அமைப்புகளுடன் இணைந்து தொடக்கம் மற்றும் முடியும் இடம், பசுமையான நடைபாதை, ஓய்வு, உட்காரும் வசதி, இரு சக்கரம் வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்துமிடம், குப்பையில்லா தூய்மையான நடைபாதை, நிழற்கூடங்கள், வழிகாட்டிகள், குடிநீர் அருந்துமிடம், சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுன்றி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தொடங்கிய பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், மருத்துவ முகாம்களில் பரிசோதித்ததில் தொற்றா நோய் பாதிப்புகள் இதுவரை புதிதாக 7,011 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. நடப்போம் நலம் பெறுவோம் என்கின்ற திட்டம் நடப்பதை ஊக்குவிப்பதற்கும், நடக்க வேண்டும் என்பதை கடந்து பங்கேற்பவர்கள் தொற்றா நோய் பாதிப்புகளை தெரிந்து கொள்வதற்கும் மிக பெரிய உதவியாக இருந்து வருகிறது.

Related Stories: