தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து

 

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: யுபிஎஸ்சிதேர்வின் இந்த ஆண்டின் முடிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள சிறப்பான வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைத்திந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே மற்றும் ஏழாம் இடத்தைப் பெற்றுள்ள ராஜா மொகைதீன் உள்ளிட்ட தேர்வானவர்களுக்கு வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” என்ற திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது, இந்தத் திட்டத்தின் செயல்திறனையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: