கோவை, பிப். 19: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான 5-வது மாநில அளவிலான குடியரசு தின விழா போட்டிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்தது. இப்போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார்.
இதில், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், கோவை மாவட்டம் பாரதீய வித்யா பவன் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பவின் மற்றும் ஆதர்ஷ் ஆகியோர் இளையோருக்கான டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது.
