கோவையில் நாளை மாநகராட்சி கவுன்சில் கூட்டம்

கோவை, பிப். 25: கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நாளை (வியாழன்) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

Related Stories: