காரமடை அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

காரமடை, பிப்.18: காரமடை அருகே உள்ள பெட்டதாபுரம் பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. காரமடை – கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதி சாலைகள் சுமார் 10 ஆண்டுக்கு மேலாக குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகின்றன.

இந்த குடியிருப்புகளுக்கு அருகிலேயே தனியார் கல்லூரி மற்றும் பள்ளி இயங்கி வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பணி நிமித்தமாக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்காக செல்லும் பொதுமக்கள் என சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், சாலையின் வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Related Stories: