கொங்குநாடு கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான பண்பாட்டு திறன் விழா

கோவை, பிப்.20: கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் kascarnival 2k26 என்ற பண்பாடு மற்றும் திறன் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அப்போது தனிநபர் நடனம், குழு நடனம், தனிநபர் பாடல், குழு பாடல், மைம், அட்சாப், டப்ஸ்மாஷ், வினாடி வினா, போஸ்டர் வடிவமைப்பு, புகைப்படம், இரங்கோலி மற்றும் புதையல் வேட்டை போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

விழாவின் சிறப்பம்சமாக, தனலட்சுமி ஆறுச்சாமி பல்நோக்கு கலையரங்கத்தில் நடைபெற்ற நேரடி இசை நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் புகழ் புன்யா பாடிய பாடல்கள் பார்வையாளர்களை கவர்ந்தது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

Related Stories: