கோவை,பிப்.20: கோவை பீளமேடு ரயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தனர். அதில், அவர் கருப்பு நிற பனியன்,காவி நிற வேஷ்டி அணிந்திருந்தார்.
இதை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்?,எந்த ஊரை சேர்ந்தவர்?அவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
