தரங்கம்பாடி பகுதியில் சம்பா, தாளடி அறுவடை தீவிரம்

தரங்கம்பாடி, பிப். 26: தரங்கம்பாடி பகுதியில் தில்லையாடி, திருக்கடையூர், காழியப்பநல்லூர், எடுத்துகட்டி சாத்தனூர், திருக்களாச்சேரி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், நல்லாடை, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, கொடவிளாகம், கடலி உள்ளிட்ட கிராமங்களில் சம்பா -தாளடி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர். தற்போது, அறுவடை நடந்து வருகிறது.

நடவு நட்ட பின் தொடர்ந்து மழை பெய்ததால் பயிர்கள் பாதிக்கப்பட்டனர். அறுவடையின் போது மகசூல் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அறுவடைக்கு பின் சுருட்டி வைக்கபட்ட வைக்கோல்களும் விற்பனையாகாததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: