டைமிங் பிரச்னையால் மினி பஸ் கண்ணாடி உடைப்பு

திருப்பூர், மார்ச் 4: திருப்பூரில் டைமிங் பிரச்னையால் மினி பஸ் கண்ணாடியை உடைத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் அதிகப்படியான மக்கள் பொது போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். அதனால், திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திலிருந்து மினி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

நேற்று முன்தினம் இரவு, இரண்டு தனியார் மினி பஸ் டிரைவர்களுக்கு இடையே டைமிங் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின்போது மினிபஸ் டிரைவர் தினகர்ராஜ் (40), என்பவர் மற்றொரு மினி பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், தினகர்ராஜை கைது செய்தனர்.

 

Related Stories: