மதுரை: கள்ளிக்குடி அருகேயுள்ள சித்தூரினை சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நல்லமநாயக்கன்பட்டியில் உறவினரின் துக்க வீட்டிற்கு சுரேஷ்குமார் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அங்கு சுரேஷ்குமாரின் அம்மா வீட்டில் இவரது மகன் ஆருத்ரன்(2) தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை குடித்துவிட்டார்.
இதில் மயங்கிய குழந்தையை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தான். கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
