எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம், மார்ச் 4: அமெரிக்கா இஸ்ரேல் இரண்டு நாடுகளும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கொமெனி படுகொலை செய்யப்பட்டார். அப்பாவி குழந்தைகள் மீது குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இச்செயலை கண்டித்தும், இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் எஸ்டிபிஐ சார்பில் உத்தமபாளையம் பைபாஸ் திடலில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் கல்பத்துல்லா கான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா இஸ்ரேல் நாடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில், எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பழனி பாபா பேரவை, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: