பண்ணாரி அம்மன் கோயில் நடை அடைப்பு

சத்தியமங்கலம்,மார்ச்4: சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதற்கிடையே நேற்று சந்திர கிரகணம் என்பதால் மதியம் முதல் இரவு வரை நடை அடைக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் ஒரு மணி அளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது. இதனால் கோயில் வளாகம் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு புற வாயில்கள் பூட்டப்பட்டது. இரவில் கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு இன்று(4ம் தேதி) அதிகாலை முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: