க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு

சென்னை: 2025-26ம் கல்வியாண்டு இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 3ல் தொடங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை முடிவடைந்தது. இந்த தேர்வெழுத சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம். மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம்.

Related Stories: