மதுரை: மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகேயுள்ள தூணில் தீபம் ஏற்றுமாறு உத்தரவிடக் கோரி ராம.ரவிக்குமார் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதிலும் தனி நீதிபதி பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தார். இந்த உத்தரவுகளை எதிர்த்து கலெக்டர், போலீஸ் கமிஷனர், அறநிலையத்துறை உள்ளிட்டோர் தரப்பில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தன. மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 16க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
