பிளஸ் 2, பிளஸ் 1 அரியர் தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 தேர்வை பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 99,692, தனித்தேர்வர்கள் 27,783 என 8 லட்சத்து 27,475 பேர் எழுதவுள்ளனர். அதேபோல், பிளஸ் 1 அரியர் தேர்வை பள்ளி மாணவர்கள் 19,107 மற்றும் தனித்தேர்வர்கள் 5,944 என 25,051 பேர் வரை எழுதுகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2, பிளஸ் 1 அரியர் பாடத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நேற்று மதியம் வெளியானது. இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறையின் //dgeapp.tnschools.gov.in/ எனும் வலைத்தளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதேநேரம் தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

Related Stories: