கிட்னி முறைகேடு வழக்கில் முறையாக விசாரணை நடக்கிறது: சிபிஐ கோரிய மனு முடித்து வைப்பு

 

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி விற்பனை மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை கடந்தாண்டு விசாரித்த நீதிபதிகள், தென்மண்டல ஐஜி தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர். இந் நிலையில் இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் சக்திகுமார் ஆஜராகி, ‘‘பள்ளிபாளையம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் முறையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

 

Related Stories: