ரூ.31,592.39 கோடி முதலீடு; 61,521 பேருக்கு வேலைவாய்ப்பு 46 முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்க சலுகைகள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு, ஊக்க சலுகைகள் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களுக்காக ரூ.31,592.39 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன் 61,521 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 24வது அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பிறகு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு, ஊக்க சலுகைகள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களுக்காக ரூ.31,592.39 கோடி முதலீடு மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன் 61,521 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது.

இந்த முதலீடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை சக்தி ஏர்கிராப்ட் நிறுவனத்தின் பயிற்சி விமான உபபாகங்கள் இணைத்தல் மற்றும் பராமரிப்பு என்எம்பி மினிபே எனும் நிறுவனத்தின் பல்வகை செயல்பாடுகளுக்கான செமிகண்டக்டர் உற்பத்தி, யால்டு பொறியியல் அமைப்பு இந்த நிறுவனத்தின் செமிகண்டக்டர் உற்பத்திக்கான சாதனங்கள் தயாரிப்பு டிக்சன்குழுமத்தின் மின்னணுவியல் சாதனங்கள் உற்பத்தி எஸ்எப்ஓ டெக்னாலிசிஸ் நிறுவனத்தின் மின்னணு உபபாகங்கள் உற்பத்தி, விக்ரம் சோலார் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்கலன் சேமிப்பு அமைப்பு தொகுத்தல் மினெர்வா சிறப்பு நோக்கவாகனம் நிறுவனத்தின் கவச வாகனங்கள் உற்பத்தி, ஹிகோகி பவர் டூல்ஸ் மிகப்பெரிய நிறுவனத்தின் மின்னாற்றல் கருவிகள் உற்பத்தி, பெஸ்டோ நிறுவனத்தின் தொழில்துறை தானியக்க சாதனங்கள் உற்பத்தி, மிக முக்கியமான ஏக்கர்ஸ் குழுமத்தின் விமான இயந்திரம் மற்றும் கியர் பாக்ஸ் உபபாகங்களுக்கான உற்பத்தி, இது சிறப்பான ஒன்றாக அமையும்.

ஸ்னைடர் எல்க்டரிக் குழுமத்தின் குளிரூட்டப்பட்ட சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தி பாரத் பயோடெக் நிறுவனத்தின் உயிர் அறிவியல் தயாரிப்பதற்கான பூங்கா மிகப்பெரிய பிரமாண்டமான ஒரு அறிவிப்பு, மிகவும் முக்கியத்துமான ஒன்றாகவும், உடனடியாக செயல்படுத்தப்படும் என்பதற்கான அத்தாட்சி இது கேட்டர் பில்லர் குழுமத்தின் கட்டுமான இயந்திரங்கள் சாதனங்கள் உற்பத்தி போயிங் நிறுவனத்தின் மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தயாரிப்புகள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

திராவிட நாயகன் முதல்வர் ஆட்சியில் தமிழ்நாட்டில் எப்படி அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதிசெய்யப்பட்டு அங்கிருக்கின்ற மக்களுக்கும், ஆங்காங்கே நமது படித்த இளைஞர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளை இந்த அமைச்சரவையின் மூலம் முதல்வர் உருவாக்கி தந்தள்ளார். இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தயாரிப்புகள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: