பாலக்கோடு, பிப்.21: பாலக்கோடு அருகே பாலதண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வட்டகானம்பட்டி கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோயில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவகிரக ஹோமம், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது. இதையடுத்து, யாகசாலையிலிருந்து புனித கலச தீர்த்தக்குடத்தை, கோயில் முக்கியஸ்தர்கள் எடுத்துச் சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா வீரபத்திரன், ஊர் கவுண்டர்கள் அனுமந்தன், பன்னீர்செல்வம் மற்றும் ஊர் மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
பாலதண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்
- பால தண்டாயுதபாணி கோவில்
- Kumbabhishekam
- பாலக்கோடு
- பாலதண்டாயுதபாணி
- கோவில்
- மகா கும்பாபிஷேகம்
- வட்டக்கணம்பட்டி
- தர்மபுரி மாவட்டம்
- கணபதி பூஜை
