தேய்பிறை அஷ்டமி வழிபாடு

 

மேலூர், பிப். 10: மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் தை மாத, சோமவார தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, வழிபாடு நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலபைரவர் சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீறு உள்பட பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம், நந்தியம் பதிகம், சிவபுராணம், காலபைரவர் 108 போற்றி, பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: