வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம்

திருச்செங்கோடு, பிப்.23: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம், இன்று (23ம் தேதி) சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபெற உள்ளது. பரமத்திவேலூர் தொகுதிக்கு காலை 9 மணியளவில் வேலூர் வர்த்தகர் திருமண மண்டபத்திலும், குமாரபாளையம் தொகுதிக்கு மதியம் 12 மணிக்கு பள்ளிபாளையம் பாவாயி பாப்பாத்தி அம்மாள் திருமண மண்டபத்திலும், திருச்செங்கோடு தொகுதிக்கு மாலை 4 மணி கொங்கு சமுதாய கூடத்திலும் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி பாக வாரியாக ஒரு பெண் பொறுப்பாளரும், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: