பால் கொள்முதல் நிலையம் பஸ் நிலையங்கள் திறப்பு எம்எல்ஏ தொடங்கி வைத்தார் அணைக்கட்டு மேற்கு ஒன்றியத்தில்

ஒடுகத்தூர், பிப்.24: அணைக்கட்டு மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பள்ளி கட்டிடம், பால் கொள்முதல் நிலையம், அங்கன்வாடி மையம் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகியவற்ற எம்எல்ஏ நந்தகுமார் நேற்று திறந்து வைத்தார்.
அணைக்கட்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான மு.பாபு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, மகமதுபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகலேரி, ஓங்கப்பாடி, வரதலம்பட்டு ஆகிய பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நினைவு பஸ்நிலையத்தை எம்எல்ஏ நந்தகுமார் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, பின்னத்துரை ஊராட்சி கும்பல்கொட்டாய் கிராமத்தில் பால் கொள்முதல் நிலையம், அங்கன்வாடி மையம், சமையல் கூடம், சின்ன புதூர் கிராமத்தில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பள்ளி கட்டிடம் போன்ற முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதில், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் கணபதி, குமார், பரிமளா கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: