விண்வெளியில் பிரம்மாண்ட டேட்டா சென்டர்..!

எலான் மஸ்க் தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX மூலம், விண்வெளியில் சூரியசக்தியில் இயங்கும் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்களை அமைக்க திட்டமிட்டுள்ளார். அதிநவீன தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் புதிய பாய்ச்சலை அளித்துவரும் எலான் மஸ்க், விண்வெளியில் சூரியசக்தியில் இயங்கும் பிரம்மாண்டமான டேட்டா சென்டர்களை அமைக்க திட்டமிட்டு வருகிறார். 62 லட்சம் கோடியில், இன்றைய விலையில் சுமார் 8 ஆயிரம் டன் தங்கத்தை வாங்க முடியும். எலான் மஸ்க் தனது சொத்தில் தினமும் 100 கோடி ரூபாய் வீதம் வீண் செலவு செய்தாலும், அவரது பணம் தீர்ந்து போக சுமார் 170 ஆண்டுகள் ஆகும்.

இவ்வளவு சொத்து இருந்தும் மஸ்க் டெக்சாஸில் உள்ள தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அருகே, ஒரு சிறிய வீட்டில்தான் வசிக்கிறார். அந்த வீடு ‘Casita’ என்று அழைக்கப்படும் ஒரு மடிக்கக்கூடிய சிறிய வீடு. செயற்கை நுண்ணறிவு மற்றும் சாட்போட்களின் (Chatbots) அதீத வளர்ச்சிக்காக அதிகப்படியான கணினி திறன் தேவைப்படுகிறது. பூமியில் உள்ள டேட்டா சென்டர்கள் அதிக மின்சாரத்தை நுகர்வதோடு, அதிக வெப்பத்தையும் வெளியிடுகின்றன. இதை தவிர்க்க விண்வெளியே சிறந்த இடம் என கருதும் எலான் மஸ்க், அங்கு டேட்டா சென்டர் அமைக்க முடிவு செய்துள்ளார்.

விண்வெளியில் சுமார் 10 லட்சம் செயற்கை கோள்களை நிலைநிறுத்தி, ஒரு மாபெரும் நெட்வொர்க்கை உருவாக்க மஸ்க் திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஒரே நாளில் 15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்தது உலகப் பொருளாதார வரலாற்றிலேயே ஒரு தனிநபர் ஈட்டிய மிகப்பெரிய ஒருநாள் வருமானம் ஆகும். எலான் மஸ்க்-கின் மற்றொரு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் இந்த வாரத்தில் 12 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. பூமியைப்போல இரவு நேரம் அல்லது மேகமூட்டம் போன்ற தடைகள் விண்வெளியில் இல்லை என்பதால், அங்கு 24 மணிநேரமும் தடையற்ற சூரியசக்தியை பெற முடியும்.

மேலும், பூமியில் சர்வர்களை குளிர்விக்க அதிக நீர் மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், விண்வெளியின் இயற்கையான குளிர்ச்சியான சூழல் இதற்கு உதவும் என மஸ்க் கூறுகிறார். விண்வெளியில் உள்ள இந்த டேட்டா சென்டர்கள் பூமிக்கு தகவல்களை அனுப்ப ரேடியோ அலைகளுக்கு பதிலாக லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும், இந்த தொழில்நுட்பம், பூமியில் உள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைவிட அதிவேகமான இணைய இணைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதி விரைவாக தகவல்களை பரிமாற முடியும். மஸ்க் ஏற்கனவே ‘Colossus’ என்ற உலகின் மிகப்பெரிய AI சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளார். இதன் அடுத்த கட்டமே, விண்வெளி டேட்டா சென்டர். இந்த திட்டத்திற்கு, தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும் எனவும் மஸ்க் அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான டேட்டா சென்டர் செயற்கை கோள்களை விண்வெளிக்கு கொண்டு செல்லவும், அவற்றை பராமரிக்கவும் இந்த ராக்கெட்கள் உதவும்.இந்த திட்டம் பிரம்மாண்டமாக தெரிந்தாலும், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சில முக்கிய சவால்களை முன்வைக்கின்றனர். விண்வெளி குளிர்ச்சியாக இருந்தாலும், வெற்றிடத்தில் கணினி சிப்கள் வெளியிடும் வெப்பத்தை வெளியேற்றுவது மிகவும் கடினம்.

இதனால் சிப்கள் உருகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விண்வெளியில் உள்ள காஸ்மிக் கதிர்கள் நுட்பமான மின்னணு பாகங்களை மிக விரைவாக சிதைத்துவிடும். ஏற்கனவே பூமியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் கழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், 10 லட்சம் செயற்கை கோள்கள் என்பது விண்வெளி விபத்துகளுக்கு வழிவகுக்கும் எனவும் மஸ்கிற்கு விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். ஒரு சிப் பழுதடைந்தால்கூட, அதை விண்வெளிக்கு சென்று மாற்றுவது என்பது மிகவும் செலவுமிக்க மற்றும் கடினமான காரியம். விண்வெளியில் இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை அமைக்க சர்வதேச விண்வெளி சட்டங்கள் அனுமதிக்காது என்றும், இந்த செயற்கைக்கோள்கள் நட்சத்திரங்களின் ஒளியை தடுக்கும் என்றும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories: