அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் விழுந்து டூவீலர் சேதம்

கெங்கவல்லி, பிப்.22: ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் விழுந்து டூவீலர் சேதமடைந்தது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாரதா பெட்ரோல் பங்க், உடையார்பாளையம், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, முக்கோணம், பருத்தி குடோன், காமராஜனார் ரோடு, கேசவன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த பேனர்கள் அதிகளவில ்வைக்கப்பட்டுள்ளது. இதனால், வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதிபெற்று அதற்கான தொகையை கட்டி, அனுமதி நம்பர் பதிவு செய்து பிளக்ஸ் பேனர் வைக்கவேண்டும் என்பது கட்டாயம். ஆனால், பலர் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு முன்புறம் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் திடீரென்று காற்றுக்கு சாய்ந்து விழுந்தது. இதில், அங்கு நிறுத்தியிருந்த டூவீலர்களின் கண்ணாடி உடைந்தது. நகராட்சியில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: