இதுவும் வேணும்… இன்னமும் வேணும்… மவுன சாமியாரை நம்பி மண்ணாகி விட்டோம்… புலம்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

 

புதுக்கோட்டை: தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் ஓபிஎஸ் மவுனமாகவே உள்ளார். இதனால் அவருடன் இருந்த நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் புதுகை மாவட்ட செயலாளர்களாக இருக்கும் 2 பேர் இப்போது, ஓபிஎஸ் அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஓபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுபற்றி புதுகை மாவட்ட ஓபிஎஸ் அணி வட்டாரத்தில் விசாரித்த போது,

ஓபிஎஸ் அணியின் புதுகை தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ரத்தினசபாபதி, வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் நகராட்சி தலைவர் ராஜசேகர் உள்ளனர். இந்த இருவரும் ஓபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மவுன சாமியார் நம்மை நட்டாற்றில் விட்டு விட்டார். ஒரு முடிவை எடுக்க கூட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். இவரை நம்பி வந்ததற்கு, இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று 2 பேரும் புலம்பிக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: