பட்ஜெட்டில் புறக்கணித்தவர்களை தேர்தலில் புறக்கணிப்போம்: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் திமுக சார்பில் ‘தமிழ்நாடு தலை குனியாது’ பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அமைச்சர் மெய்யநாதன் பேசியது:‘ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் ‘திருக்குறளும் இல்லை’, ‘தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை’. இது மிகப்பெரிய ஏமாற்றம். நிதி இல்லாமல் மாநிலத்தை எப்படி நடத்துவது.

தமிழ்நாட்டிற்கு நிதி தராமல் புறக்கணிப்பவர்களை, தேர்தலில் நாம் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெறுவது வெறும் ஆட்சி அல்ல ஏழைகளின் அரண், தமிழர்களின் அடையாளம். வரும் தேர்தல் ஜனநாயகத்திற்கும், சமூகநீதிக்கும் சவால் விடக்கூடிய தேர்தல். இந்த தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்’ என்றார்.

Related Stories: