ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.4: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோயிலில் திடீரென வைக்கப்பட்ட சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி தென்னமங்கலம் கண்மாய்கரையில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான கோயில் உள்ளது. இங்கு நேற்று திடீரென மாரியம்மன் சிலை, சூலாயுதம் ஆகியவை புதிதாக வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கிராமமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணன்கோவில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். வேறு கோயிலில் இருந்த சிலையை திருடிக் கொண்டு இங்கு வைத்துவிட்டார்களா, சிலையை வைத்த மர்மநபர்கள் யார் என கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைகள் மீட்கப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
