கே.வி.குப்பம் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை மந்தம்

கே.வி.குப்பம், மார்ச் 31: கே.வி.குப்பம் ஆட்டுசந்தையில் வியாபாரம் மந்தமானதால், வியாபாரிகள் வேதனையடைந்தனர். கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் திங்கள் தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த வாரங்களில் பண்டிகை நாட்கள் வந்ததால் கணிசமாக ஆடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. அதேபோன்று இந்த வாரமும் ஆட்டுச்சந்தை நடைபெறும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை வழக்கம்போல் சந்தை கூடியது. இதில் கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், குடியாத்தம், காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் கொண்டுவரப்பட்டன.

சராசரியாக ஆடுகளின் விலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை குறைந்து போனதால் ஆடுகள் விற்க வந்த வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல் அதிகளவில் வெள்ளாடுகளும், குட்டி ஆடுகளும் வரத்து இருந்ததால், ஆடுகள் வாங்க வந்தவர்கள் பல்வேறு ரகங்கள் கொண்ட ஆடுகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். எதிர்பார்த்த தொகை வியாபாரம் நடைபெறாமல் போனதால் சிலர் ஆடுகளை விற்க முடியாமல் வீட்டிற்கு கொண்டு சென்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் வியாபாரம் சரிந்து ரூ.20 லட்சம் மட்டுமே வர்த்தகம் நடந்தது. புனித வெள்ளி, மகாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளில் அசைவ உணவுக்கு முக்கியத்துவம் இருக்காது, இதனால் வரும் வாரங்களிலும் இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: