100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, மார்ச் 31: காவேரிப்பட்டணத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. காவேரிப்பட்டணத்தில் வருவாய் துறை சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, வினாயகர் கோயில் வழியாக பனகல் தெரு, அரசமரத்து தெரு, பாலக்கோடு கூட்ரோடு வழியாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வந்தடைந்தது. இப்பேரணியை துணை தாசில்தார் மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர் மகேஸ்வரி மற்றும் வருவாய் ஆய்வாளர் திவ்யா ஆகியோர் துவக்கி வைத்தனர். காவேரிப்பட்டணம் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது, சட்டமன்றத் தேர்தலில், பொதுமக்கள் தங்களின் வாக்குரிமையை தவறாமல் செலுத்த வேண்டும். நமது மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Related Stories: