100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, மார்ச் 31: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி நாட்டின் ஜனநாயகக் கடமையை வாக்காளர்கள் உணரும் வகையில், என் நாடு என் ஓட்டு 100 சதவீதம் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சதீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, மாவட்ட எஸ்பி அலுவலகம் வரை நடந்தது. கலெக்டர் சதீஸ் உறுதிமொழியை வாசிக்க, கல்லூரி மாணவிகள் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, தேர்தல் திருவிழா- தமிழ்நாட்டின் பெருவிழா, என் நாடு என் ஓட்டு என்பதை வலியுறுத்தி, கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ரோபோட் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கவிதா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்தவர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், தாசில்தார் சுகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: