ஆத்தூர் எல்லையில் வாகன தணிக்கை

கெங்கவல்லி, மார்ச் 31: ஆத்தூர் தனி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் தொகுதி முழுவதுமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆத்தூர் தொகுதியில் செலவின மேற்பார்வையாளர் ஐஆர்எஸ் அதிகாரி காலே சுசில்குமார், நேற்று ஆத்தூர் எல்லையில் பறக்கும்படை அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்வதை ஆய்வு செய்தார். அதிகாரிகளுக்கு பணிகளை இன்னும் அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளை வழங்கினார். வாகன தணிக்கையின் போது வருபவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் யார் என்பதை முதலில் அவர்களிடம் சொல்லிவிட்டு, பிறகு வாகனத்தில் சோதனையில் ஈடுபடவேண்டும். மரியாதை குறைவாக யாரையும் பேசிடக் கூடாது என அறிவுறுத்தினார்.

Related Stories: