திருச்செங்கோடு, மார்ச் 31: திருச்செங்கோட்டில் திமுக சார்பில் போட்டியிடும் கொமதேக ஈஸ்வரன், தனது பெயரில் 4 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார். திருச்செங்கோட்டில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கூட்டணி கட்சியினருடன், தேர்தல் நடத்தும் அலுவலர் லெனினிடம் தனது பெயரில் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அவருடன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் விஜய்சரவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சதீஷ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் வந்தனர். அப்போது, வேட்புமனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி படிவத்தை வாசித்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து ஒப்புகை சீட்டை ஈஸ்வரன் பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி மாற்று வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, ஈஸ்வரன் கூட்டணி கட்சியினருடன் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக வந்தார்.
கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வேட்புமனு தாக்கல்
- ஈஷ்வரன்
- பொது செயலாளர்
- கோமதேகா திருகோணமடை
- கோமதேகா ஈஸ்வரன்
- திமுகா
- ட்ரைச்சென்கோட்
- Eeswaran
- கொங்குனாட் மக்கள் தேசிய கட்சி
