முதல் நாளில் 19 பேர் வேட்பு மனு தாக்கல்

நாமக்கல், மார்ச் 31: நாமக்கல் மாவட்டத்தில் முதல் நாளில் 19 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது.ராசிபுரத்தில் 2 வேட்பு மனுக்களும், சேந்தமங்கலத்தில் ஒரு வேட்பு மனுவும், நாமக்கல்லில் 2 வேட்பு மனுவும், பரமத்திவேலூரில் ஒன்றும், திருச்செங்கோட்டில் 8 வேட்பு மனுக்களும், குமாரபாளையத்தில் 5 வேட்பு மனுக்களும் என மொத்தம் 19 வேட்பு மனுக்கள் நேற்று முதல் நாளில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories: