சென்னை: ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் வாங்க 20% மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மானியம் வழங்க ஆண்டுக்கு ரூ.30 கோடி ஒதுக்கப்படும். கோவை கொடிசியா வளாகத்தில் முதலாவது ஜவுளி மாநாடு தொடங்கியது. கொடிசியா வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஜவுளி தொழில் மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
