சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் பாடம் எடுக்கும் கிராமப்புற ஆசிரியர்களுக்காக ‘AI for Educators – K12 Teachers’ என்ற தலைப்பில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 மணி நேரம் நடைபெறும் பயிற்சியானது ஆங்கில வழியில் நடத்தப்படும்.
பாடம் திட்டமிடுதல் (லெசன் பிளானிங்) மற்றும் கதை சொல்லலில் ஏஐயின் பங்கு, மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்தல் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் மாணவர்களை ஈர்த்தல் போன்ற பல நவீன தொழில்நுட்ப உத்திகள் ஆசிரியர்களுக்குக் கற்றுத்தரப்படும்.
பிப்ரவரி 5ம் தேதி அன்று தொடங்கவுள்ள பயிற்சி முற்றிலும் இலவசம். பயிற்சியின் முடிவில் ஆன்லைன் வழியாகத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஐஐடி சென்னை பிரவர்தக் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.ஆர்வமுள்ள ஆசிரியர்கள் https://iitmpravartak.org.in/AI_Educators_K12_teachers என்ற இணையதள முகவரியில் ஜனவரி 31க்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
