டிரம்ப் பொம்மை எரித்தபோது தீக்காயம் மார்க்சிஸ்ட் நிர்வாகி மருத்துவமனையில் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே அகரஒரத்தூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 10ம்தேதி ஒன்றிய குழு உறுப்பினர் நன்மாறன் தலைமையில் வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது திடீரென டிரம்ப் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் கலந்து கொண்ட கிளை செயலாளர் கல்யாணசுந்தரத்துக்கு (45) பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் நள்ளிரவு கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்.

Related Stories: